விடியற்காலை 5 மணிக்கு யாரோ வீட்டின் கதவை தட்ட பரணி கதவை திறக்க, உள்ளே வந்த ஷண்முகம் எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடு என்று சொல்லி சாப்பிட, திரும்பவும் கதவை தட்டும் சத்தம் கேட்க ஷண்முகம் ஒளிந்து கொள்கிறான், பரணி கதவை திறக்க முத்துப்பாண்டி ஷண்முகம் எங்கே என்று கேட்க நீ தானே கூட்டிட்டு போன என்று பதில் சொல்கிறாள்.
அவன் ஸ்டேஷனலில் இருந்து தப்பித்து விட்டான் என்று சொல்லி வைகுண்டத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முடிவு செய்ய பரணி நான் தான் அவன் பொண்டாட்டி வேணும்னா என்னை கூட்டிட்டு போ என்று பரணி ஷாக் கொடுக்க, முத்துப்பாண்டி அவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.