பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வசூல் வேட்டை... பாகுபலி 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த சலார்

First Published | Jan 5, 2024, 8:42 AM IST

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ள தகவல் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

salaar

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். அப்படத்தின் இரண்டு பாகங்களும் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்ததால் அடுத்தடுத்து பிரபாஸ் நடிக்கும் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் பாகுபலி வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ஆதி புருஷ், ராதே ஷியாம் ஆகிய மூன்று படங்களும் படு தோல்வியை சந்தித்தன.

salaar box office

இந்த ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீள பிரபாஸ் நடித்த திரைப்படம் தான் சலார். இப்படத்தை கேஜிஎப் எனும் பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கியதால், இப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என மலைபோல் நம்பி இருந்தார் பிரபாஸ். சலார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. 

இதையும் படியுங்கள்... உடைந்த கையோடு விஜயகாந்திற்கு அஞ்சலி - கேப்டன் நினைவாக புதிய முயற்சி - உறுதி அளித்த அருண் விஜய்! என்ன அது?

Tap to resize

Salaar beat Baahubali 2

படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கலை சந்தித்தது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சலாருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காவிட்டாலும், வடமாநிலங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானாவில் சலார் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் அப்படம் இரண்டே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இந்த நிலையில், இப்படம் மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

salaar Nizam collection

அதன்படி ஆந்திராவில் உள்ள நிஜாம் ஏரியாவில் மட்டும் சலார் திரைப்படத்திற்கு 73 கோடிக்கு மேல் ஷேர் தொகை கிடைத்துள்ளதாம். இதற்கு முன்னர் பாகுபலி 2 திரைப்படம் 73 கோடி ஷேர் தொகையை குவித்ததே சாதனையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சலார் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து உள்ளது. இதன்மூலம் நடிகர் பிரபாஸ் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முண்டா பனியன்.. அரைக்கால் டவுசர்.. வித்யாசமாக வந்த அமீர்கானின் மாப்பிள்ளை - ஜோராக நடந்த திருமணம்! Viral Video!

Latest Videos

click me!