சாதி மதம் தாண்டி... மனிதம் தான் முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தியுள்ளது அயோத்தி! நடிகர் சசிக்குமார் பேட்டி!

Published : Mar 07, 2023, 04:09 PM IST

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் அயோத்தி படத்தை பார்த்த பின்னர் நடிகர் சசிகுமார் இப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.  

PREV
14
சாதி மதம் தாண்டி... மனிதம் தான் முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தியுள்ளது அயோத்தி! நடிகர் சசிக்குமார் பேட்டி!

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் யாஷ் பால் ஷர்மா, புகழ், போஸ் வெங்கட் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. பலரும் கடந்து வரும் முக்கிய பிரச்சனை குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் நாயகன் சசிகுமார் தஞ்சையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

24

இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம், தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை நேற்று திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து  பார்வையிட்டார்.

Anikha: நீச்சல் குளம் பக்கத்தில் நின்று... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அசத்தல் போஸ் கொடுத்த அனிகா!

34

 பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி, மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கோம் என்றும், நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது 'அயோத்தி' திரைப்படம் என்று தெரிவித்தார்.

44

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம் அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான், அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விசயம் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காலில் மிகப்பெரிய கட்டோடு... எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! என்ன ஆச்சு?

click me!

Recommended Stories