சிம்புவை நம்பி ரூ.100 கோடியை இறக்கும் கமல்... பத்து தல ரிலீஸுக்கு பின் டபுள் ஆக்‌ஷனில் மிரட்ட தயாராகும் STR?

Published : Mar 07, 2023, 03:14 PM IST

பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
சிம்புவை நம்பி ரூ.100 கோடியை இறக்கும் கமல்... பத்து தல ரிலீஸுக்கு பின் டபுள் ஆக்‌ஷனில் மிரட்ட தயாராகும் STR?

நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

25

பத்து தல படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்தபடம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முன்னதாக அவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது, பின்னர் மிஷ்கின் படத்தில் நடிப்பார் என சொன்னார்கள், அண்மையில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

35

இந்நிலையில், தற்போது பரவி வரும் தகவல் என்னவென்றால், நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பது தான். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் தயாரிப்பில் முழுவீச்சில் இறங்கிய கமல், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும், உதயநிதியை வைத்து ஒரு படமும் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இதில் சிவகார்த்திகேயன் படம் தாமதம் ஆவதால் உதயநிதி படத்தை முதலில் எடுக்க பிளான் போட்டு வைத்திருந்தார் கமல்.

இதையும் படியுங்கள்... 20 ஆண்டுகளாக வடிவேலுவை கிட்ட கூட நெருங்க விடாத அஜித்... இருவருக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை?

45

ஆனால் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அறிவித்ததோடு, கமலின் படத்தில் இருந்தும் விலகினார். உதயநிதி படம் கைகூடாததால், தற்போது கமலின் பார்வை சிம்புவின் பக்கம் திரும்பி இருக்கிறதாம். சிம்புவை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

55

இதில் மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் இது கடந்த 1978-ல் கமல் நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு சிகப்பு ரோஜாக்கள் 2- உருவாக உள்ளதாகவும், பாரதிராஜாவின் மகன் மனோஜ் அப்படத்தை இயக்க சிம்பு அதில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. கொரோனா காரணமாக அந்த சமயத்தில் கைகூடாமல் போன அப்படம் தற்போது கமல் மூலம் மீண்டும் உயிர்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. விரைவில் கமல் - சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Anikha: நீச்சல் குளம் பக்கத்தில் நின்று... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அசத்தல் போஸ் கொடுத்த அனிகா!

Read more Photos on
click me!

Recommended Stories