ஆர்.ஜே.வாக இருந்து, சீரியல் நடிகராகவும், பின்னர் வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் மிர்ச்சி செந்தில். குறிப்பாக இவர் விஜய் டிவியில் நடித்த 'சரவணன் மீனாட்சி' தொடரில் மிகவும் பிரபலம். இந்த சீரியலில், மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜா.
இந்த சீரியலில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேறு லெவலில் உள்ளதாகவும், இவர்கள் இருவரும் உண்மையிலேயே வாழ்க்கையில் சேர வேண்டும் என ரசிகர்கள், பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில்... ஒரு நிலையில் உண்மையாகவே, ஸ்ரீஜா - செந்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும், இருவரும் சேர்ந்து 'மாப்பிள்ளை' சீரியலில் நடித்திருந்தனர்.
முக்கிய சீரியலை விட்டு விலகும் பிரியதர்ஷினி..! வெளியான பரபரப்பு காரணம்!
மேலும் செந்தில் விஜய் டிவியில் நடித்திருந்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. ஸ்ரீஜா மற்றும் மிர்ச்சி செந்திலுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், சமீபத்தில் தான் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை மிர்ச்சி செந்தில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.