பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரியும், சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள தொகுப்பாளியும் சீரியல் நடிகையுமான பிரியதர்ஷினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஒளிபரப்பாகி வருவதால்.. இந்த சீரியலில் இருந்து விலக பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'நம்ம வீட்டு பொண்ணு' சீரியலில் இருந்து இவர் விலகி உள்ளதால், இவருக்கு பதில் இனி சீரியல் நடிகை பானுமதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.