‘மண்டேலா’வை போல்... விருதுகளை அள்ளிக்குவிக்க ரெடியான யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : Jan 05, 2023, 03:25 PM IST

ஷான் இயக்கத்தில் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
‘மண்டேலா’வை போல்... விருதுகளை அள்ளிக்குவிக்க ரெடியான யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நகைச்சுவையாக நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் ஹீரோவாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மண்டேலா திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

24

மடோன் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் சலூன் கடை நடத்துபவராக நடித்திருந்தார் யோகிபாபு. அவரின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தது. அந்த இரண்டு விருதுகளும் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு தான் கிடைத்திருந்தது.

இதையும் படியுங்கள்....துணிவு - வாரிசு படங்களுக்கு ரசிகர் ஷோ ரத்து?... விஜய் - அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

34

மண்டேலாவுக்கு அடுத்தபடியாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் பொம்மை நாயகி. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஷான் இயக்கி உள்ளார். தந்தை மகள் உறவை மையமாக வைத்து எமோஷனல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது. இப்படத்தில் யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி என்பவர் நடித்திருக்கிறார்.

44

இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தான் தயாரித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். மண்டேலாவை போல் இந்த படமும் விருதுகளை வென்று குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்....விவாகரத்துக்கு பின்... ஒரே ஹீரோவை வைத்து போட்டி போட்டு படம் இயக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா..!

Read more Photos on
click me!

Recommended Stories