தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக 3 மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானாலும், அந்த படங்கள் எந்த தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்பதை அறிவிக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர். இரு படங்களின் டிரைலரிலும் குறிப்பிடாமல் இருந்த ரிலீஸ் தேதி நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி துணிவு படமும், வாரிசு படமும் வருகிற ஜனவரி 11-ந் தேதி நேருக்கு நேர் மோத உள்ளன. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேபோல் இரு படங்களின் முன்பதிவும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதால், திரும்பிய பக்கமெல்லாம் வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சுதான்.
இதையும் படியுங்கள்... விவாகரத்துக்கு பின்... ஒரே ஹீரோவை வைத்து போட்டி போட்டு படம் இயக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா..!
பொதுவாக விஜய் - அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், அதிகாலை 1 மணி, 4 மணி என ரசிகர் ஷோக்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த ரசிகர் ஷோ காட்சியை பார்ப்பதற்கென பல ஆயிரம் செலவு செய்து டிக்கெட் வாங்கவும் தயங்காத வெறித்தனமாக ரசிகர் கூட்டம் விஜய் - அஜித் இருவருக்குமே உள்ளனர்.
அப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்கும் ரசிகர் ஷோ மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. காலை 8 மணிக்கு தான் இரண்டு படங்களுக்கும் முதல் காட்சி திரையிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.