Image: Still from the trailer
டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போதிலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. ராணுவ வீரராக வரும் நாயகன் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மைய கதையாக இருந்தது. சான் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார்.
Varisu
பேமிலி செண்டிமெண்ட் சார்ந்த கதைக்களமாக உருவாகி வரும்வாரிசு இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும்.முன்னதாக படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. அதன்படி வெளிநாட்டில் இருக்கும் நாயகன் தன குடும்பத்திற்காக நாடு திரும்பும் கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...அட... இவர்தான் எஸ்பிபி - யின் மகளா? வைரலாகும் புகைப்படம் இதோ...
VARISU
இதற்கிடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலானது. ஹதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என அனைத்து சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...தனக்கு பிடிக்காத நடிகர்கள்... விஜயின் அதிரடி பேட்டி...