simbu
முன்னதாக சிம்பு இயக்குனர் கோகுலுடன் இணைந்து கொரோனா குமார் என்கிற படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கொரோனா குமார் ஒரு டார்க் காமெடி த்ரில்லர் என்றும் கூறப்பட்டது.
simbu
இந்த படம் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இப்படத்தில் பகத் பாஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாக இருந்தார். விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய ரோலில் வருவார் என கூறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...அட... இவர்தான் எஸ்பிபி - யின் மகளா? வைரலாகும் புகைப்படம் இதோ...
SIMBU
சமீபத்தில் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்த படங்கள் முடிந்ததும் கொரோனா குமார் படிப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் சிலம்பரசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது .
மேலும் செய்திகளுக்கு...தனக்கு பிடிக்காத நடிகர்கள்... விஜயின் அதிரடி பேட்டி...
RJ Balaji
இயக்குனர் கோகுல் முன்னதாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா போன்ற சில வெற்றி படங்களை இயக்கி இருந்தார். ஆர்.ஜே பாலாஜியுடன் இவர் இணைந்துள்ள புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஆண்டு இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.