படங்கள் பிளாப் ஆனாலும் சம்பளத்தை சல்லி பைசா குறைக்காத சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸுக்கு இத்தனை கோடி வாங்கினாரா?

First Published | Jul 27, 2023, 3:46 PM IST

நடிகர் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் சந்தானமும் ஒருவர். விஜட் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டுந்த சந்தானத்தின் திறமையை பார்த்து வியந்துபோன சிம்பு, அவரை தொக்காக தூக்கிட்டு போய் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவரின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், அடுத்தடுத்து விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

ஹீரோயின் இல்லாத படங்கள் கூட இருக்கும், ஆனால் சந்தானம் இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு காமெடி ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்தார் சந்தானம். சினிமாவில் காமெடியனாக உச்சத்தில் இருந்தபோதே அவருக்கு திடீரென ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனால் படிப்படியாக காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், பின்னர் போகப்போக முழு நேர ஹீரோவாகவே மாறிவிட்டார்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!


இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பதிவு செய்தன. இதன்பின்னர் அவர் நடித்த பிஸ்கோத், டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் காமெடியனாகவே ஆகிவிடலாம் என அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் கமிட் ஆனார். ஆனால் அப்படம் தொடங்கும் முன்பே டிராப் ஆனது.

DD returns

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்திற்காக நடிகர் சந்தானம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்தாலும் நடிகர் சந்தானம் சம்பளத்தை மட்டும் குறைக்காமல் வைத்துள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... K.S Chitra : இந்தியாவின் மெலடி குயின்.. சின்னக்குயில் சித்ரா AsiaNet News நிறுவனத்திற்கு அளித்த பேட்டி!

Latest Videos

click me!