Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!

Published : Oct 20, 2026, 02:23 PM IST

Sanju Samson : வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிஞ்ச கையோட, ரஜினிகாந்த் நடிச்ச 'ஜெயிலர் 2' படத்தை பார்க்க டீம் இந்தியா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ரெண்டு தியேட்டர்களை மொத்தமா புக் பண்ணியிருக்கும் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

PREV
14
Sanju Samson Watch Jailer 2 Movie

இந்தியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் எப்பவுமே களத்துலயும் சரி, வெளியேயும் சரி ஏதாவது ஒரு விஷயத்துக்காக செய்திகள்ல இடம்பிடிச்சிடுவாரு. கேரளாவுல பிறந்த இவருக்கு இந்தியா முழுக்க பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு. சஞ்சு சாம்சன், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட தீவிர ரசிகர் என்பது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான். இப்போ சமீபத்துல ரிலீசான 'ஜெயிலர் 2' படத்துக்காக ரெண்டு தியேட்டர்களை மொத்தமா புக் பண்ணி, தலைவர் மேல தனக்கு இருக்கிற அன்பை வெளிப்படுத்தியிருக்காரு சஞ்சு.

Jailer 2 Movie Review : சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் 2 டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ

24
மொத்தமா ரெண்டு தியேட்டர் புக்கிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் முடிஞ்ச உடனே, தன்னோட குடும்பம், நண்பர்கள், சக வீரர்களோட சேர்ந்து ஜெயிலர் 2 படம் பார்க்க தியேட்டரையே மொத்தமா புக் பண்ணி எல்லார் கவனத்தையும் ஈர்த்திருக்காரு சஞ்சு சாம்சன். இதுபத்தி பேசின சஞ்சு, 'எனக்கு ரஜினிகாந்த் படம் பார்க்கிறதுனா ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறையும் ரஜினி படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருப்பேன். இந்த முறை ஒரு நாள் லேட் ஆகிடுச்சு. நேத்து டெல்லியில ஒரு நிகழ்ச்சி இருந்ததால படம் பார்க்க முடியல,' அப்படின்னு சொல்லியிருக்காரு.

Jailer 2 : வெற்றியில் அனிருத் - காவ்யா... ரோகிணியில் தனுஷ் - ஐஸ்வர்யா! ஜோடியாக ஜெயிலர் 2 பார்த்த பிரபலங்கள்

34
குஷியில் சஞ்சு சாம்சன்

'இன்னைக்கு என் அதிர்ஷ்டம், தியேட்டரையே மொத்தமா புக் பண்ண முடிஞ்சது. என் நண்பர்களை இன்னைக்கு படம் பார்க்க கூப்பிட்டு இருக்கேன். என் மனைவியும் என் கூட படம் பார்க்க வராங்க. பெரிய ஸ்கிரீன்ல ரஜினிகாந்த் படத்தை பார்க்க ரொம்பவே ஆர்வமா காத்துட்டு இருக்கேன்,' அப்படின்னு சஞ்சு சாம்சன் சொல்லியிருக்காரு. டீம் இந்தியாவுல இருக்கிற நிறைய வீரர்களுக்கு தமிழ் நல்லாவே புரியும். அதனால, அணியில இருக்கிற வீரர்களுக்கும், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் இந்த ஜெயிலர் படத்தை பார்க்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்காராம் சஞ்சு சாம்சன்.

Rajinikanth: 75 வயசுலயும் இப்படி ஒரு எனர்ஜியா? 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

44
ஜெயிலர் 2 படத்தோட ஹைப்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்துல வந்திருக்கிற ஜெயிலர் 2 படம், 2023-ல ரிலீசான ஜெயிலர் படத்தோட இரண்டாம் பாகம். இந்த படத்துல ரஜினிகாந்த் மறுபடியும் தன்னோட ஐகானிக் கேரக்டரான 'டைகர் முத்துவேல் பாண்டியன்' ரோல்ல நடிச்சிருக்காரு. ரிட்டயர்டு போலீஸ் அதிகாரியான அவரு, தவிர்க்க முடியாத காரணத்தால மறுபடியும் களத்துல இறங்க வேண்டியிருக்கு. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், ரஜினிகாந்தின் மாஸ் ஸ்டைல், இந்தியா முழுக்க இருக்கிற ரசிகர்களை கட்டிப்போடுற சூப்பரான மியூசிக்னு இந்த படம் பட்டைய கிளப்புது. ரிலீசான முதல் அஞ்சு நாள்லயே ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிஸ்ல வசூல் மழை பொழிஞ்சிட்டு இருக்கு.

Jailer 2 Memes : ஜெயிலர் 2 ட்ரெண்டிங் மீம்ஸ்..ரஜினி முதல் நெல்சனின் காமெடி வரை இணையத்தில் தெறிக்கும் கலாய்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories