பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் தற்போது வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சஞ்சய் தத்துக்கு பிறமொழி படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.
அந்த வகையில், நடிகர் சஞ்சய் தத், தற்போது தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் சஞ்சய் தத். தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் நடிப்பதை படக்குழு நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தளபதி 67 படத்தின் ஒன்லைன் கேட்டதும் அப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டதாக சஞ்சய் தத் தெரிவித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கில்லி ஜோடி..! தளபதி 67-ல் திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா?
இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத். தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் 180 பேருடன் தனி விமானத்தில் நேற்று காஷ்மீர் சென்ற படக்குழு, இன்று முதல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. குறிப்பாக அங்கு விஜய் - சஞ்சய் தத் இடையேயான காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.