மயோசிட்ஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட சமந்தாவுக்கு... மகளிர் தினத்தில் குஷி படக்குழு செய்த விஷயம்! வைரல் போட்டோ

Published : Mar 08, 2023, 11:01 PM IST

நடிகை சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ள நிலையில், குஷி படக்குழுவினர் மகளிர் தினத்தில் சமந்தாவுக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.  

PREV
14
மயோசிட்ஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட சமந்தாவுக்கு... மகளிர் தினத்தில் குஷி படக்குழு செய்த விஷயம்! வைரல் போட்டோ

நடிகை சமந்தா கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக, மயோசிட்டிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

24

எனவே மீண்டும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ள சமந்தா, அவ்வப்போது தன்னுடைய ஒர்கவுட் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட, அவை லைக்குகள் குவித்து வருகிறது.

Actor Bala Health: ICU-வில் இருக்கும் நடிகர் பாலா உடல்நிலை குறித்து மனைவி கூறிய தகவல்!

34

மேலும் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, கடந்த ஒரு மாதமாக ஹிந்தியில் நடித்து வரும் சீட்டாடல் தொடரில் நடித்து வந்ததாக கூறப்பட்டது.

44

இதைத்தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் Shiva Nirvana இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வரும் 'குஷி' படபிடிப்பில் இணைத்துள்ளார். இந்நிலையில் இன்று, மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை சமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக,  படக்குழுவினர் சமந்தாவுக்கு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமணமான நடிகரை கமுக்கமாக காதலித்து விட்டு.. அவர் ஒரு பிளே பாய் என தெரிந்ததும் கழட்டி விட்ட நடிகை மீனா?

click me!

Recommended Stories