தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான பேமிலிமேன் என்கிற வெப் தொடரில் நடித்த பின்னர் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்து விட்டார். தற்போது நடிகை சமந்தாவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேபோல் தெலுங்கிலும் குஷி என்கிற பான் இந்தியன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.
இதனிடையே நடிகை சமந்தா நடித்த சரித்திர படமான சாகுந்தலம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த நடிகை சமந்தா, இப்படத்துக்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக புரமோஷனும் செய்தார். இதனாலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிஸிலும் பயங்கர அடி வாங்கியது.
இதையும் படியுங்கள்... தலைநகரத்தில் சோழர் படை...! விமானத்தின் முன் பொன்னியின் செல்வன் டீம் நடத்திய மாஸ் போட்டோஷூட் இதோ
சுமார் 40 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளில் ரூ.4 கோடி வசூல் தான் கிடைத்தது. இதையடுத்து நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதளபாதாளத்தில் சென்றது. நேற்றைய தினம் இப்படம் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்ததாம். இதனால் சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவின் கெரியரில் படு தோல்விப் படமாக அமையும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.