yashoda release date : 'யசோதாவாக' மாறிய சமந்தா..எப்ப ரிலீஸ் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Apr 05, 2022, 06:24 PM IST

 yashoda release date : சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யசோதா படத்தில் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேவி மூவிஸ் அறிவித்துள்ளது. 

PREV
18
yashoda release date : 'யசோதாவாக' மாறிய சமந்தா..எப்ப ரிலீஸ் தெரியுமா?
samantha

நடிகை சமந்தா (Samantha), நாக சைதன்யாவை பிரிந்த பிறகு வேறலெவல் முன்னேற்றத்திற்கு கைவசம் ஆக்கினார். முன்பு குடும்ப குலவிளக்காக நடித்து வந்த சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு மிகவும் சேஞ்ச் ஆகிவிட்டார்.

28
samantha

இதுவும் சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் தொடர்ந்து  பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து வருகிறார். 

38
samantha

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வரும் சமந்தா சமீபத்தில் புஷ்பா படத்தில் ஓ...சொல்ட்ரியா மாமா பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். மீண்டும் ஐட்டம் சாங் வாய்ப்பு வந்தும் சமந்தா அவற்றை மறுத்து விட்டார்.
 

48
samantha

இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கவரும் விதமாக  அவ்வப்போது போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் ஒரு போஸ்டுக்கு  ரூ.12 முதல் 15 லட்சம் வரை வாங்க நடிகை சமந்தா வாங்குவதாக சொல்லப்படுகிறது.

58
samantha

தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

68
samantha

இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள கத்துவாக்குல ரெண்டு காதல் படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

78
yashoda

தற்போது சமந்தா நடித்து முடித்துள்ள மற்றோரு படமான யசோதா (yashoda) திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  கதையம்சத்தை கொண்டது. ஹரி மற்றும் ஹரீஷ் என இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

88
yashoda

இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேவி மூவிஸ் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

click me!

Recommended Stories