நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யசோதா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அவர் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கதையம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.