சமந்தாவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? சாகுந்தலம் படம் பிப்.17-ல் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு

First Published | Feb 7, 2023, 2:29 PM IST

ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17-ந் தேதி ரிலீஸ் ஆகாகது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் படங்களில் நடிக்காமல் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இடையே அவர் நடித்த யசோதா என்கிற திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. அப்போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நடிகை சமந்தா புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து படிப்படியாக உடல்நலம் தேறி கடந்த மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள தொடங்கி உள்ளார் சமந்தா. அதோடு அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்கிற படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு, கண்கலங்கியபடி பேசி இருந்தார் சமந்தா. அவர் நடித்த சாகுந்தலம் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... விக்கி AK 62 படத்தில் இருந்து விலக இது தான் காரணமா? மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட கண்டிஷன்.. பரபரக்கும் பணிகள்

Tap to resize

ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்ததால், இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகுந்தலம் படத்தை வருகிற பிப்ரவரி 17-ந் தேதி எங்களால் ரிலீஸ் செய்ய முடியாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். உங்களின் தொடர்ச்சியான அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளனர். சாகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... காந்தாரா முதல் பாகம் இனிமே தான் வரப்போகுது.. அப்போ கடந்தாண்டு ரிலீஸ் ஆனது? ரிஷப் ஷெட்டி சொன்ன ஷாக்கிங் அப்டேட்

Latest Videos

click me!