தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்து நடித்து வந்த சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தகவல் வெளியானது.
இவரே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், மன அழுத்தத்தில் இருந்து விடுபட தன்னுடைய நாய் குட்டிகளுடன் நேரம் செலவிடுவது, மற்றும் நண்பர்களை சந்தித்து பேசுவதாகவும் தெரிவித்து வந்தார்.
கணவரை விட்டு பிரிந்ததை விட சமந்தாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்றால், விவாரத்துக்கு காரணம் என சமந்தாவை பற்றி பரவிய வந்தந்திகள் தான். சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார்.
இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய விவாகரத்து விஷயங்களில் இருந்தும், மனஅழுத்ததில் இருந்தும் வெளியேற தற்போது சமந்தா தன்னுடைய நெருங்கிய தோழி ஒருவருடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரிஷிகேஷ் சென்றதாகவும் அங்கு உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்றதாகவும் அங்கு தான் ஆழ்நிலை தியான பயிற்சி செய்ததாகவும் குறிப்பாக அங்குள்ள சில புகழ்பெற்ற புத்தகங்களில் உள்ள பாடல்களை தான் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமந்தா இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தில் அவருடைய நெருங்கிய தோழி உடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு அவர் சுற்றுப் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.