உலக அளவில் நேசிக்கப்படும் தல அஜித்..! போனி கபூர் வெளியிட்ட வைரல் போட்டோஸ்..!

Published : Oct 23, 2021, 12:17 PM IST

சற்று முன்னர் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor)  அஜித் (Ajith) குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
உலக அளவில் நேசிக்கப்படும் தல அஜித்..! போனி கபூர் வெளியிட்ட வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

28

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

38

தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

 

48

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும், சுமார் இரண்டு வருடங்களாக வலிமை படம் உருவாகி வந்த நிலையில், இந்த படம் குறித்து அடிக்கடி சில அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான முன்னோட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

 

 

58

அதே போல் அவ்வப்போது, அஜித் திரைப்படத்திற்காக பைக் ரெய்டில் ஈடுபட்ட BTS புகைப்படங்களும், அஜித் வலிமை படத்தை முடித்ததில் இருந்து பைக் ரெடில் ஈடுபடும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.

 

68

அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

78

அதில் அவரது ஆர்வத்தையம், அவரது ஒவ்வொரு கனவையும் நனவாகுகத்திலும் எதுவும் தடுக்க முடியாது. உலக அளவில் நேசிக்கப்படுகிறார் அஜித் என்கிற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.

 

 

88

வலிமை படத்தை தொடர்ந்து, அஜித் யார் நடிப்பில் யார் இயக்கத்தில் நடிப்பார்? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில்  தயாரிப்பாளர் போனி கபூர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தின் 61 வது படத்தை மீண்டும் தயாரிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

 

 

click me!

Recommended Stories