நடிப்புக்கு பிரேக்... ஈஷா மையத்தில் பூரண ஆரோக்கியத்திற்காக தியான நிலையில் சமந்தா! வைரல் போட்டோஸ்!

First Published | Jul 19, 2023, 10:57 PM IST

நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் தொடரில் நடித்து முடிந்த பின்னர் நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு, தன்னுடைய உடல் நலனுக்காக ஆன்மீக தியானம் செய்து, நலம் பெற முயன்று வருகிறார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

தென்னிதியை திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், துரதிஷ்ட வசமாக, இவர் காதல் கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற, சில மாதங்களில் தீவிர உடல்நல பிரச்சனையால் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.
 

சமந்தா, அரிய வகை தசை அழற்சி நோயான... மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சுமார் 7 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்ற பிறகே உடல் நலம் தேறினார். 'சாகுந்தலம்' படத்தின் டப்பிங் பணியை கூட, கையில் ட்ரிப்ஸ் போட்டுக்கொண்டே தான் மேற்கொண்டார். எழுந்து நடக்க கூட முடியாமல் இருந்த சமந்தா, சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையுடன் மீண்டார். 

மகளுடன் ஒரு நாள்... அம்மாவுடன் மறுநாள்..! அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி புரட்டி எடுத்த முரட்டு நடிகர்!
 

Tap to resize

நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் ஆத்மீகத்தில் அதிக நாட்டம்  காட்டி வரும் இவர், அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும், சிவாலயங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம் மற்றும் தியானங்கள் செய்து உடல் நலம் பெற முயன்று வருகிறார்.

வெள்ளை நிற சல்வாரில், கழுத்தில் சிவப்பு அரளி பூ மாலை அணிந்தபடி... ஈஷா யோகா மையத்தில் பல பெண்களுக்கு நடுவே சமந்தாவும், அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!
 

Latest Videos

click me!