சமீப காலமாகவே, பிரபலங்கள் பலர் திரை துறையில் தாங்கள் சந்தித்த மோசமான அனுபவங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பாலிவுட். கோலிவுட் திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் 'மீ டூ' என்கிற ஹேஷ்டேக் மூலம், தங்களுக்கு நடந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். தமிழ் திரையுலகில் சின்மயி மீடூ சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்சனைகளை அதில் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் ஒரு சில படங்களிலும், பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ரத்தன் ராஜ்புட். இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார். குறித்து அவர் கூறுகையில்... " ஓஷிவாரா பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் புதிய திரைப்படத்திற்கான நடிகை தேர்வு நடைபெற்று வருவதாக, நண்பர்கள் கூறியதை தொடர்ந்து... நான்அங்கு என்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.
அங்கு என்னை மட்டும் உள்ளே வரச் சொல்லி, ஒரு சுச்சுவேஷனை கூறி நடித்துக் காட்ட கூறினார்கள். நான் நடித்த பின்னர், தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் என்னை பாராட்டினார். பின்னர் குளிர்பானம் கொடுத்து குடிக்கச் சொன்னார். அதனை ஒரு சிப் குடித்ததுமே அசவ்கரியமாக உணர்ந்தேன். எனவே முழுவதையும் குடிக்காமல் வைத்துவிட்டேன். பின்னர் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லா இடங்களிலும் பல துணிகள் கிடந்தன. பெண் ஒருவரும் போதையில் மயங்கி கிடந்தார்.
வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க தயார்..! கைதி பார்ட் 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
அங்கிருந்த நபர் ஒருவர், ஆடிஷனுக்கு வரவேண்டும் என்றால் தனியாக வரவேண்டியது தானே... உன் ஆண் நண்பரை யார் அழைத்து வர சொன்னார்கள் என்று சத்தம் போட்டார். இவர்கள் நடந்து கொண்ட விதம் தவறாக இருந்ததை புரிந்து கொண்டு, அங்கிருந்து என் நண்பருடன் விறுவிறுவென வெளியே தப்பி வந்து தப்பி ஓடி வந்து விட்டேன் என ரத்தன் ராஜ்புட் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.