இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கி வந்தாலும் , இவரின் படங்களில் மது, போதை பொருள், புகை பிடிப்பது போன்ற காட்சிகள் எல்லையை மீறி வைக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்ற போல், இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களும் போதை பொருள் மற்றும் மது குடிப்பது போன்ற காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுருந்தது.