என்னடா இது... ஆதிபுருஷும் அவெஞ்சர்ஸும் கலந்த மாதிரி இருக்கு - ட்ரோல் செய்யப்படும் புராஜெக்ட் கே பர்ஸ்ட் லுக்

First Published | Jul 19, 2023, 4:17 PM IST

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் புராஜெக்ட் கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்து பான் இந்தியா படங்களாக உருவாக்கப்பட்டன. பாகுபலிக்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்தன. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என கடைசியாக அவர் நடித்த மூன்று பெரிய பட்ஜெட் படங்களும் படு தோல்வியை சந்தித்தது.

Project K

இதனால் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள பிரபாஸ், தற்போது மலைபோல் நம்பியுள்ள படம் தான் புராஜெக்ட் கே. தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் புராஜெக்ட் கே படத்தை இயக்கி உள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Tap to resize

அதன்படி இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. சந்தோஷ் நாராயண் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... 'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!

புராஜெக்ட் கே என்றால் என்ன என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. அதற்கான விடை வருகிற ஜூலை 21-ந் தேதி தெரியவரும். அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் மாநாட்டில் புராஜெக்ட் கே என்றால் என்ன என்பதை விவரிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளனர். இதற்காக பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சர்ப்ரைஸாக புராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதென்ன ஆதிபுருஷும், அவெஞ்சர்ஸும் சேர்ந்த மாதிரி கலவையா இருக்குனு கிண்டலடித்து வருகின்றனர். ரசிகர்களை அப்செட் ஆக்கும் வகையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... கனவு படம் முதல் லியோ ஆடியோ லாஞ்ச் வரை... அப்டேட்டுகளை அள்ளித்தெளித்த லோகேஷ் கனகராஜ் - முழு விவரம் இதோ

Latest Videos

click me!