'நாகசைதன்யாவின் ஜீவனாம்சத்தை மறுத்த சமந்தா'..இது தான் காரணமா?

Kanmani P   | Asianet News
Published : Apr 29, 2022, 02:27 PM IST

சமந்தா சொத்து மதிப்பு 84 கோடியை தண்டியுள்ளதாம். இவ்வாறு கணவரை விட தனது சொத்து மதிப்பு அதிகம் என்பதாலேயே சமந்தா ஜீவனாம்சத்தை மறுத்துவிட்டாராம்.

PREV
18
'நாகசைதன்யாவின் ஜீவனாம்சத்தை மறுத்த சமந்தா'..இது தான் காரணமா?
samantha

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

28
samantha

கௌதம் மேனனின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சமந்தா பாணா காத்தாடி  மூலம் நாயகியாக அவதரித்தார். பின்னர் நான் ஈ படம் இவரை உலக நாயகியாக மாற்றியது. இதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களான சூர்,யா விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து  ரசிகர் பட்டாளத்தை பெற்றார் சமந்தா. 

38
samantha

குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்த சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்குப் பிறகு தனது போக்கை சற்று மாற்றிய சமந்தா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க  ஆரம்பித்தார். அதன்படி சூப்பர் டீலக்ஸ், ஓ பேபி உள்ளிட்ட மாறுபட்ட கதை களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

48
samantha

எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் ஓ...சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்து குத்தி இந்திய நாயகியாக மாறினார். சினிமா துறையில் மைல்கற்களை கடந்து வரும் சமந்தா திருமண வாழ்வில் போதுமான வெற்றியை காணவில்லை. நான்கு ஆண்டுகள் சுமூகமாக சென்று கொண்டிருந்த இவரின் காதல் வாழ்க்கையை திடீரென முடிவிற்கு வந்தது. கடந்த ஆண்டு இவரும் நாக சைதன்யாவும் தங்களது விவாகரத்து குறித்த சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர்.
 

58
samantha

இதன்பிறகு சமந்தா தனது பயணத்தில் மிக உறுதியான காலடிகளை எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளார். அதோடு தனது தோற்றத்திலும் வித்தியாசத்தைக் காட்டும் சமந்தா கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார். நாக சைதன்யாவும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.

68
Samantha

இந்நிலையில் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. முன்னதாக நாக சைதன்யா ஜீவனாம்சமாக கொடுப்பதாக கூறிய 200 கோடி ரூபாயை சமந்தா மறுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை  உண்டாக்கியுள்ளது.

78
Samantha

மூன்று தலைமுறை நடிகர்களாக இருக்கும் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுக்கு  34 கோடி மட்டுமே சொத்துக்கள் இருப்பதாகவும், சமீபத்தில் முன்னணி நாயகியான சமந்தாவும் சுமார் ரூ. 84 கோடி சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

88
samantha

அதோடு சமந்தாவிற்கு ஹைதராபாத்தில் பல வீடுகள் இருப்பதாகவும், நிலங்கள் இருப்பதாகவும், மும்பையில் ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு சொகுசு கார்கள் மூன்றும் பிஎம்டபிள்யூ காரும், ஜாக்குவார் காரும் சமந்தா கைவசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கணவரை விட தனது சொத்து மதிப்பு அதிகம் என்பதாலேயே சமந்தா ஜீவனாம்சத்தை மறுத்துவிட்டாராம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories