கடந்த ஆண்டு வரை டி.ஆர்.பி.யில் டாப்பில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் வினுஷா என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.