‘ஆள விடுங்கடா’னு வேகமாக காரில் ஏறிய நடிகை... டயரில் காற்றை புடுங்கிவிட்டு ரசிகர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு

First Published | Apr 29, 2022, 12:49 PM IST

Anupama Parameswaran : நடிகை அனுபமா, தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். 

மலையாளத்தில் அல்போன் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். முதல்படத்திலேயே தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்ததாக தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்ற அவருக்கு அங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்ததால், தற்போது டோலிவுட்டில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை அனுபமா, தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். நடிகை வருவதை அறிந்து அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து காரில் வந்திறங்கிய அனுபமா, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று திறப்பு விழாவில் பங்கேற்றார்.


நிகழ்ச்சி முடிந்து காரில் ஏற வெளியே வந்த அனுபமாவை பார்த்ததும் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீட்டு, அவரை காரில் ஏற்றி விட்டனர். அவருடன் செல்பி எடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், அவரது கார் செல்ல விடாமல் ரகளை செய்தனர்.

கோபத்தில் சிலர் அவரது காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ரசிகர்களை விரட்டி அடித்து, பின்னர் அனுபமாவை வேறொரு காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். ரசிகர்களின் இந்த செயலால் நடிகை அனுபமா மிகவும் கோபமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... Kamalhaasan : இளையராஜாவுடன் சென்று ராக்கி பாய்யை பார்த்த கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படங்கள்

Latest Videos

click me!