பிரபல நடிகையான சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து அக்டோபர் 2021ல் விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
25
அண்மையில் வெளியாகிய யசோதா பட நிகழ்ச்சியில் இதுபற்றி நடிகை சமந்தா கண்ணீருடன் தெரிவித்தது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
35
நடிகை சமந்தா தனது நோயுடனான போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறியது, பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டியது என்றே சொல்லலாம்.
சமந்தா தனது வரவிருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் ப்ரோமோஷனின் போது, பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது என்னுடைய ஒவ்வொரு நலம் விரும்பிகளும், குடும்ப உறுப்பினர்களும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
55
ஆனால் அதைச் செய்வதில் நான் உறுதியாக இருந்தேன். விவாகரத்து பெற்ற பிறகு அதே வீட்டில் உட்கார விரும்பவில்லை. தான் எந்த தவறும் செய்யவில்லை. நான் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன் என்றும் சமந்தா பகிர்ந்துள்ளார். சமந்தா பேசிய இக்காணொளியை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.