Samantha : ஷவர்..ஷேவ்..ஷோ அப்..கவலையை மறக்க துடிக்கும் சமந்தாவின் புதிய புகைப்படங்கள் ...

Published : Nov 07, 2022, 03:38 PM ISTUpdated : Nov 07, 2022, 03:40 PM IST

எவ்வளவு அசிங்கமான விஷயமாக இருந்தாலும் சவர் சேவ் ஷோ அப் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மூன்று படங்களை பகிர்ந்துள்ளார். அதில் மிகவும் கவலை தோய்ந்து காட்சியளிக்கிறார் சமந்தா.

PREV
19
Samantha : ஷவர்..ஷேவ்..ஷோ அப்..கவலையை மறக்க துடிக்கும் சமந்தாவின் புதிய புகைப்படங்கள் ...

தெலுங்கு நாயகியான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி  இருந்தார். இந்த படத்தில் காமியோவில்தோன்றியிருந்த இவருக்கு பானா காத்தடி படத்தில் அதர்வாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

29

இதை தொடர்ந்து நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் இவர் தோன்றியிருந்தார். ஆனால் இதில் எந்த படமும் போதிய வரவேற்பை தர மறுத்த நிலையில் நான் ஈ படம் இரண்டு மொழிகளிலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

39

தமிழில் தெலுங்கு என ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார் சமந்தா. பின்னர் மிகப்பெரிய வரவேற்பு இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது.சூர்யாவுடன் அஞ்சான், விஜயின் கத்தி, தனுஷின் தங்க மகன், மீண்டும் விஜயுடன் தெறி, மெர்சல், சிவகார்த்திகேயனுடன் சீம ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் சமந்தா. 

மேலும் செய்திகளுக்கு...Actress pooja hegde : மெல்ல மெல்ல குணமடையும் பூஜா ஹெக்டே ...போட்டோவை பார்த்து வாழ்த்து சொன்ன ரசிகர்கள் 

49
Samantha

கடந்த ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஐட்டம் சாங்கிற்கு டான்ஸ் ஆடி பேன் இந்தியா நாயகியாக மாறிவிட்டார். தற்போது இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. 

59

இதற்கிடையே தெலுங்கு சூப்பர் நாயகன் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவை 9 ஆண்டுகள்  காதலித்து வந்த சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு காரணம் எதுவும் குறிப்பிடாமல் அவரை பிரிவதாக போஸ்ட் செய்திருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

69
Samantha

இதுவரை விவாகரத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அதோடு மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தாவை அவரது தோழர்கள் ஆசுவாசப்படுத்தினர். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா முன்பை விட அதிக கவர்ச்சியில் இறங்கினார்.

மேலும் செய்திகளுக்கு...kollywood celebrities : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்...யாரெல்லாம் தெரியுமா?

79

குடும்ப குத்து விளக்காக பார்த்த சமந்தா தற்போது பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு தன் உடலை கட்டுடல் ஆக்கி கவர்ச்சிகளை கொட்டுகிறார். இந்நிலையில் இவரது கரியரில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. அதாவது அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா. நவம்பர் 11ஆம் தேதி யசோதா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், மையோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா இது குறித்த பதிவை வெளியிட்டு இருந்தார்.

89

இதை தொடர்ந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் மருத்துவமனைகள் சமந்தாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதோடு மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக ஒரு தகவலும் கசிந்திருந்தது. பின்னர் அந்த தகவல் மறுக்கப்பட்டது.

99

இந்நிலையில் சமந்தா தனது சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்து, அதில் எனது நண்பன் குறிப்பிட்டபடி எவ்வளவு அசிங்கமான விஷயமாக இருந்தாலும் சவர் சேவ் ஷோ அப் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மூன்று படங்களை பகிர்ந்துள்ளார். அதில் மிகவும் கவலை தோய்ந்து காட்சியளிக்கிறார் சமந்தா.

click me!

Recommended Stories