சினிமா வரலாற்றில் முதன்முறையாக சம்பள விஷயத்தில் புது டிரெண்டை உருவாக்கிய சமந்தா! குவியும் பாராட்டு

Published : Mar 10, 2025, 01:10 PM IST

சினிமாவில் சம்பளம் என்பது ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்களுக்கு மிகவும் குறைவு தான் என்பதால் அதை முறைப்படுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளார் சமந்தா.

PREV
14
சினிமா வரலாற்றில் முதன்முறையாக சம்பள விஷயத்தில் புது டிரெண்டை உருவாக்கிய சமந்தா! குவியும் பாராட்டு

Samantha implement Pay parity in her Movie Bangaram : சினிமாவில் நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு தான் மிகவும் கம்மியான சம்பளம் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, சமந்தா, திரிஷா ஆகியோரின் சம்பளம் இன்னும் 20 கோடியை தாண்டவில்லை. நடிகர்களைப் போல் நடிகைகளுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் எதுவும் மாறியபாடில்லை.

24
Samantha Ruth Prabhu

மாற்றம் என்பது எப்போதும் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஏற்ப நடிகை சமந்தா, தற்போது சம்பள விஷயத்தில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். அதன்படி தன்னுடைய தயாரிப்பில் நடிக்கும் அனைவருக்கும் சமமாக சம்பளம் வழங்கி இருக்கிறாராம் சமந்தா. இந்த தகவலை அவர் தயாரிக்கும் பங்காரம் படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது கூறினார்.

இதையும் படியுங்கள்... சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா –ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்!

34
Nandini Reddy, Samantha

நடிகை சமந்தா கடந்த 2023-ம் ஆண்டு ’திரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக பங்காரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் நடிகை சமந்தா தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சமந்தாவை வைத்து ஜபர்திஷ் மற்றும் ஓ பேபி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நந்தினி ரெட்டி தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

44
Samantha Bangaram Movie

தயாரிப்பாளராக நடிகை சமந்தா பாலின பாகுபாடி இன்றி சம்பளம் வழங்கி இருப்பதாக கூறிய நந்தினி ரெட்டி. இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு முன்னெடுப்பை இதுவரை யாரும் செய்ததில்லை என தெரிவித்தார். சினிமாவில் ஒரு ஆண் நான்கு வருடங்களில் சாதிப்பதை ஒரு பெண் சாதிப்பதற்கு 8 ஆண்டுகள் ஆகும் என கூறினார். நந்தினி ரெட்டி வெளியிட்டுள்ள இந்த சமத்துவ சம்பள விவகாரத்தால் சமந்தாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா; குஷி மோடில் ஃபேன்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories