ஜிவி பிரகாஷின் 25ஆவது படமாக உருவான கிங்ஸ்டன் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்தது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய இந்தப் படம் அட்வெஞ்சர் மற்று த்ரில்லர் கதையை மையப்படுத்திய படமாக திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி நடித்திருந்தார்.
25
GV Prakash and Divya Bharathi
பேச்சிலர் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி இருவரும் 'கிங்ஸ்டன்' படத்தில் 2ஆவது முறையாக இணைந்து நடித்தனர். பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் தனது படத்திற்கு தானே இசையமைத்துள்ளார். அப்படித்தான் இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நிதின் சத்யா, அழகம் பெருமாள், ஷா ரா, சேத்தன், இளங்கோ குமரவேல் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான மர்ம கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பட்ஜெட் ஏன் என்று கேட்டால், அதற்கு இந்தப் படத்தில் 2000க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது தான் காரணம். மேலும், இதுவரையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வந்த படங்களில் இந்தப் படத்திற்கு தான் அதிக பட்ஜெட் என்று கூறப்படுகிறது.
45
Sea Adventure Movie
கடலுக்கு செல்லும் மீனவர்கள், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்று மீன் பிடிக்கும் போது அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இதற்க்கு பேய்கள் தான் காரணம் என கூறப்படும் நிலையில், ஜிவி பிரகாஷ் ஒரு கேங்குடன் கடலுக்கு செல்கிறார். அதன் பிறகு கடலின் நடுப்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. திகில் காட்சிகளுடன் படத்தை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் முதல் நாளில் ரூ.90 லட்சம் வசூல் குவித்திருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஓடிடி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, கிங்ஸ்டன் ஓடிடி ஒளிபரப்பு முடிந்த பிறகு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிங்ஸ்டன் ஓடிடி உரிமை எவ்வளவு என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Kings