Actress Abhinaya Engagement : நடிகை அபிநயா, விஷாலோட காதல்ல இருக்கிறதாகவும், அவர கல்யாணம் பண்ணிக்க போறதாகவும் கொஞ்ச நாளா வதந்தி பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அபிநயா. ஒரே ஒரு போட்டோல எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ணியுள்ள அவர், எல்லாருக்கும் குட் நியூஸ் ஒன்றையும் சொல்லி இருக்கிறார். அதன்படி தான் கல்யாணம் பண்ணிக்க போறதாக அறிவித்துள்ள அபிநயா, கையோடு நிச்சயதார்த்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.
24
Abhinaya Engagement Photo
அந்த நிச்சயதார்த்த புகைப்படத்தில் அபிநயா தன்னுடைய வருங்கால கணவருடன் மோதிரம் மாற்றிக்கொண்டபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோல அவங்க கை, மற்றும் அவரது வருங்கால கணவரின் கை இருக்கு. இருவரின் விரலிலும் மோதிரம் இருக்கு. `எங்க பயணம் இன்னைக்கு ஆரம்பம்`னு குறிப்பிட்டுள்ள அபிநயா, வெறும் கை மற்றும் மோதிரத்தை காட்டி நிச்சயதார்த்தம் ஆயிடுச்சுன்னு கன்ஃபார்ம் பண்ணி இருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை யாருன்னு அவர் சொல்லவில்லை..
அபிநயா கல்யாணம் பண்ணிக்க போறவரு யாருன்னு இப்போ சஸ்பென்ஸா மாறிடுச்சு. விஷாலோட வதந்தி இருந்ததால அது துளியும் உண்மை இல்லை என்பதை இந்த ஒரு போட்டோ மூலம் சொல்லி இருக்கிறார் அபிநயா. ஆனால் தன்னுடைய வருங்கால கணவர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் அபிநயா, அந்த விஷயத்தை போக போக அவரே அறிமுகம் பண்ண வாய்ப்பும் இருக்கு.
நடிகை அபிநயா தன்னுடைய ரிலேஷன்ஷிப் பத்தி சமீபத்துல ஒரு இன்டர்வியூல பேசியுள்ளார். அதில், தான் சின்ன வயசு பிரண்ட் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கிறதா சொன்னாங்க. எங்க ரெண்டு பேருக்கும் 15 வருஷ பந்தம்னு சொன்னாங்க. எந்த விஷயமா இருந்தாலும் அவரோட தான் ஷேர் பண்ணிக்குவேன்னு சொன்னாங்க. அதனால அவங்க காதலரையே அவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு தெளிவா தெரியுது. ஆனா அவரு யாருன்னு மட்டும் தெரியல. அவரு இண்டஸ்ட்ரிய சேர்ந்தவரா? பிசினஸ் மேனா?ன்னு கண்டுபிடிக்க நெட்டிசன்ஸ் பிஸியா இருக்காங்க.
44
Actress Abhinaya Marriage soon
அபிநயாவுக்கு காது கேக்காது, பேச முடியாது. ஆனாலும் நடிப்பில் கலக்குவார். சில படங்கள்ல ஹீரோயினா கூட பண்ணிருக்காங்க. விஷாலோட சமீபத்துல `மார்க் ஆண்டனி` படத்துல ஹீரோயினாக நடித்திருந்தார் அபிநயா. இதுதவிர தமிழில் நாடோடிகள் உள்பட சில வெற்றிப்படங்களில் நடித்துள்ள அபிநயா, தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் மலையாளத்திலும் நடிகையாக எண்ட்ரி கொடுத்திருந்தார் அபிநயா. தற்போது சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் அபிநயா.