Samantha-வின் குழந்தைக்கு போட்டிபோட்டு பெயர் வைத்த ரசிகர்கள்... சமந்தா செலக்ட் பண்ணியது இந்த பெயர்தான்..!

Published : Sep 01, 2026, 12:34 PM IST

Samantha Gets a Baby Name : நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர், பிறக்கவிருக்கும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

PREV
14
Samantha Gets a Baby Name

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களைத் தாண்டி வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்ததன் மூலம், தென்னிந்திய அளவில் மட்டுமின்றி பான்-இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். சினிமாவைத் தாண்டி சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.

24
குழந்தைக்கு பெயர் என்ன?

தற்போது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அவர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள், அன்றாட அனுபவங்கள் மற்றும் முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்திய ரசிகர்கள் உரையாடலில், ஒருவர் நேரடியாக குழந்தையின் பெயர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். “பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?” என அவர் கேட்டிருந்தார்.

34
ரசிகர் வைத்த சூப்பர் பெயர்

இதற்கு சமந்தா, குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது தான் நினைத்ததைவிட மிகவும் சிரமமான விஷயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நல்ல பெயர்கள் தெரிந்தால் தன்னிடம் பரிந்துரைக்குமாறும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய இந்த பதில் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு ரசிகர், பெண் குழந்தையாக இருந்தால் ‘சமைரா’ (Samaira) என்றும், ஆண் குழந்தையாக இருந்தால் ‘சாம்ராஜ்’ (Samraj) என்றும் பெயர் வைக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார். ‘சாம்’ மற்றும் ‘ராஜ்’ ஆகிய பெயர்களுடன் தொடர்புபடுத்தி இந்தப் பெயர்களை அந்த ரசிகர் பரிந்துரைத்துள்ளார்.

44
சமந்தாவின் ரிப்ளை

இந்தப் பெயர் பரிந்துரையை பார்த்த சமந்தா, அதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார். குறிப்பாக ‘சாம்ராஜ்’ என்ற பெயர் நம்மைப் பற்றியே கொஞ்சம் அதிகமாக பெருமை பேசுவது போல இருக்கிறதே? என்ற வகையில் அவர் கமெண்ட் செய்துள்ளார். சமந்தாவின் இந்த ஒரு வரி பதில்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குழந்தையின் பெயர் குறித்த சாதாரண கேள்வியைக்கூட தனது நகைச்சுவை உணர்வால் சுவாரஸ்யமான உரையாடலாக மாற்றிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சமந்தா மீண்டும் சினிமாவில் எப்போது முழுவீச்சில் நடிக்கத் தொடங்குவார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் அடுத்ததாக தேர்வு செய்யும் கதை மற்றும் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குழந்தையின் பெயர் குறித்து ரசிகர்களிடமே ஐடியா கேட்ட சமந்தா, அதில் வந்த ‘சாம்ராஜ்’ பரிந்துரைக்கும் செம கலகலப்பாக ரியாக்ட் செய்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories