சுமார் 9 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், சமந்தா - நாகசைதன்யா ஜோடி. திருமணத்திற்கு பிறகு இருவருமே தொடர்ந்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமந்தாவும் தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வந்தார். மேலும் திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து, மஜிலி, ஓ பேபி போன்ற படங்களிலும் நடித்தனர்.
நடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், குடும்பத்தினரையும் கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார் சமந்தா. எனவே இவரை பார்த்து பொறாமை படாத நாயகிகளும் இல்லை. ஆனால் யார் கண் பட்டதோ, திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களின் வாழ்க்கையையே திருப்பி போட்டுவிட்டது.
யாரும் எதிர்பாராத போதே, இருவருமே திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து ஷாக் கொடுத்தனர். ஆனால் ஏன்? இந்த திருமண முறிவு என்பதற்கு இருதரப்பில் இருந்தும் தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. சமீபத்தில் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்ட போது கூட, முன்னாள் கணவர் மீது எந்த அளவிற்கு கோபம் உள்ளதை என்பதை தான் வெளிப்படுத்தினார்.
இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து பல மாதங்கள் ஆகியும் கூட, இவர்களது குடும்பத்தினரால் இன்னும் அந்த நிகழ்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை என்பது சில தினங்களுக்கு முன்னர், சமந்தாவின் தந்தை போட்ட பதிவு மூலம் தெரிகிறது.
சமந்தாவின் தந்தை சமந்தா - சைதன்யாவின் சில திருமண மிகவும் உணர்வு பூர்வமாக போட்டுள்ள பதிவில், கூறி இருப்பதாவது.. “நீண்ட காலத்திற்கு முன்பு ; ஒரு கதை இருந்தது; அனால் அது இனி இருக்காது !!! எனவே, ஒரு புதிய கதை மற்றும் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்!!!” . இவரது இந்த பதிவை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.