நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த நோய் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடந்த சாகுந்தாலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் சமந்தா.
இதனிடையே சமந்தா நேற்று சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டது. இதற்காக வருத்தப்படுவதாக பதிவிட்டு இருந்தார். சமந்தா நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இந்த வேளையில் நெட்டிசன் போட்ட இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த பதிவை பார்த்த சமந்தா, அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மாதக்கணக்கான சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக்கொள்ளும் நிலை என்னைப்போல் உங்களுக்கும் வந்துவிடக்கூடாது என நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக என்னிடமிருந்து அன்பைத் தருகிறேன்” என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த Thug Life பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... விஜய் முதல் யோகிபாபு வரை... வாரிசு படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ