தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்த ஆண்டு சமந்தா நடிப்பில் கடந்த 3 மாதங்களாக எந்த படங்களும் ரிலீசாகாமல் இருந்த நிலையில், இந்த மாதம் தமிழ் புத்தாண்டன்று அவர் நடித்த சாகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆனது.
இப்படத்தின் ரிலீசுக்கு முன் நடிகை சமந்தா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் செய்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருந்தது. நடிகை சமந்தாவும் இப்படத்தை மலைபோல் நம்பி இருந்தார். ஏனெனில் அவர் நடிப்பில் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் படம் இது என்பதால் இதன்மூலம் அடுத்த லெவலுக்கு சென்றுவிடலாம் என்கிற கனவில் இருந்தார். ஆனால் படத்தின் ரிசல்ட் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
இதையும் படியுங்கள்... திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
சாகுந்தலம் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை 10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. சமந்தாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக சாகுந்தலம் அமைந்துள்ளது. இப்படத்தின் தோல்வியால் நடிகை சமந்தாவும் கடும் அப்செட்டில் உள்ளாராம். சாகுந்தலம் படத்தின் தோல்விக்கு பின் நடிகை சமந்தா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
அதன்படி அவர் தற்போது பான் இந்தியா படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. கதை சொல்ல வரும் இயக்குனர்கள் பான் இந்தியா படம் என்று சொன்னால் வேண்டவே வேண்டாம் என சமந்தா மறுத்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவின் இந்த அதிரடி முடிவுக்கு சாகுந்தலம் படம் தந்த படு தோல்வி தான் காரணம் என கூறப்படுகிறது. நடிகை சமந்தா கைவசம் குஷி திரைப்படம் உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.
இதையும் படியுங்கள்... சினிமா மீதான காதலை வெளிப்படுத்த நடிகை திரிஷா குத்திய டாட்டூ - அதுவும் அந்த இடத்திலா..!