தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதை நெருங்கிவிட்டாலும், இளமை ததும்ப அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. திரிஷா நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார் திரிஷா.