நம்பிய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நம்பிக்கை துரோகம் செய்தாரா ஸ்ருதி? தனுஷுடனான டேட்டிங் குறித்து நச் பதில்!

Published : Apr 20, 2023, 01:28 AM IST

நடிகர் தனுஷுடன்  ஸ்ருதிஹாசன் டேட்டிங் செய்தது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் விவாகரத்துக்கு காரணம் என வதந்திகள் பரவிய நிலையில், இது குறித்து முதல் முறையாக நச் என பதில் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன்.  

PREV
15
நம்பிய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நம்பிக்கை துரோகம் செய்தாரா ஸ்ருதி? தனுஷுடனான டேட்டிங் குறித்து நச் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இந்த தம்பதிகளுக்கு தற்போது லிங்கா - யாத்ரா என இரு மகன்களும் உள்ளனர். சுமார் 18 வருடங்கள், மிகவும் ஒற்றுமையான தம்பதியாக..  பலரும் பொறாமை கொள்ளும் வகையில் வாழ்ந்து வந்த இந்த தம்பதி, கடந்த ஆண்டு திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக, தங்களுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
 

25

இந்நிலையில் இவர்கள் இருவருமே தற்போது வரை... விவாகரத்துக்காக  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாத நிலையில், குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட தனுஷின் நெருங்கிய நண்பரான, சுப்பிரமணியம் சிவா தனுஷும் - ஐஸ்வர்யாவும், மீண்டும் பேச துவங்கியுள்ளனர். தங்களுடைய கருத்து வேறுபாடுகளை கைவிட்டு விட்டு, பிள்ளைகளுக்காக மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்றும், அடுத்த ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மாளவிகா மோகனனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! உடல் மெலிந்து ஒல்லி குச்சிபோல் போல் மாறிட்டாரே? வைரல் போட்டோஸ்!
 

35

ஆனால் இது குறித்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருவருமே தங்களுடைய பணிகளில் மட்டுமே பிசியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் 3 படத்தில் இணைந்து நடித்த போது, டேட்டிங் செய்து வருவதாக அப்போதே சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அன்று தனுஷ் - ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட பிரச்சனை தான், தற்போது இவர்கள் விவாகரத்து பெற காரணம் என்பது போல சிலர் கட்டு கதைகளை அள்ளிவிட்டனர்.
 

45

இந்த விவகாரம் சில விமர்சனங்களுக்கும் ஆளானது. ஸ்ருதிஹாசன்... ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி என்பதாலும் 3 படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதாலும்,  ஐஸ்வர்யா அவரை தன்னுடைய படத்தில், கணவருக்கே ஜோடியாக நடிக்க வைத்தார். ஆனால் அவருக்கு ஸ்ருதிஹாசன் நம்பிக்கை துரோகம் செய்வது போல், அவருடைய கணவருடனே டேட்டிங் செய்தார் என கூறினர்.

எல்லை மீறிய கவர்ச்சி? அந்த ஒரு நூல் பிச்சிகிட்டா மானமே போய்டும்! பாரில் நின்று கிளாமர் அலப்பறை பண்ணும் யாஷிகா!
 

55

இதுவரை இந்த வதந்தி குறித்து வாய் திறக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது முதல் முறையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  நடிகர் தனுஷ் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே, தொழில் ரீதியாக தனக்கு பல உதவிகளை செய்துள்ளார். என்னை சுற்றி பத்தாயிரம் வதந்திகள் உள்ளது என்பது எனக்கு தெரியும், ஆனால் உண்மை இது தான். இதை என் பம்பில் மைக்கோர் சிப் வைத்து கொண்டு போய் அனைவரிடமும் இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு நேரடியாகவே பதில் கூறி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories