பவன் கல்யாண், மகேஷ் பாபு, NTR, ராம் சரண், அல்லு அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை சமந்தா, இதுவரை பிரபாஸ் உடன் மட்டும் நடித்ததில்லை.
யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் பான்-இந்தியா ஹீரோவாக வலம் வருகிறார். பாகுபலிக்குப் பிறகு, தொடர் பிரம்மாண்ட படங்களால் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கிறார். சில தோல்விகள் வந்தாலும் அவரது கிரேஸ் குறையவில்லை. பிரபாஸுடன் படம் என்றால் இயக்குநர்கள், நடிகைகளுக்கு கொண்டாட்டம் தான். படப்பிடிப்பில் அனைவருக்கும் வீட்டு சாப்பாடு கொடுப்பார். அவருடன் நடிக்காத முன்னணி நடிகைகளே இல்லை என சொல்லலாம். ஆனால் நடிகை சமந்தா மட்டும் அவருடன் இதுவரை ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்கவில்லை. அது ஏன் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
24
பிரபாஸ் உடன் சமந்தா நடிக்காதது ஏன்?
பவன் கல்யாண், மகேஷ் பாபு, NTR, ராம் சரண், அல்லு அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் பிரபாஸுடன் நடிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சனையா என்று விசாரித்தால் அதுவும் இல்லை. பிறகு ஏன் நடிக்கவில்லை என்று கேட்டால், இருவரின் உயர வேறுபாடுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சமந்தாவை விட பிரபாஸ் மிகவும் உயரமானவராம். அதனால் தான் அவர்கள் காம்போவில் இதுவரை ஒரு படம் கூட வராமல் இருக்கிறது.
34
பிரபாஸ் விளக்கம்
சமீபத்தில் பிரபாஸ் இதுகுறித்து பேசினார். தனக்கும் சமந்தாவுக்கும் 10 அங்குல உயர வித்தியாசம் இருப்பதால், கேமரா பிரேமில் வைப்பது கடினம் என்றார். ஆனால், இதே உயரமுள்ள மகேஷ் பாபுவுடன் சமந்தா நடித்துள்ளார். பிரபாஸ் தற்போது 'ராஜா சாப்', ஹனு ராகவபுடியின் படம் என பிசியாக உள்ளார். இதைத் தவிர சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்', 'சலார் 2', 'கல்கி 2' போன்ற படங்களும் வரிசையில் உள்ளன.
சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் பிசியாக உள்ளார். 'மா இன்டி பங்காரம்' என்ற புதிய படத்தை தொடங்கியுள்ளார். இது தவிர, இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளதால், அவர் விரைவில் பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.