சர்தார் 2 படத்தில் இருந்து திடீரென விலகிய யுவன் சங்கர் ராஜா! அவருக்கு பதில் இவரா?
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் சர்தார் 2 படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திடீரென விலகி இருக்கிறார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் சர்தார் 2 படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திடீரென விலகி இருக்கிறார்.
Sardar 2 Music Director Changed : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் சர்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் ரூ.100 கோடியை அள்ளியது. அப்படம் ஹிட் ஆனதும் அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தனர். சர்தார் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா விலகல்
சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து யுவன் திடீரென விலகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா விலகியதால் அவருக்கு பதில் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கைதி படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதுதவிர அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள கைதி 2 படத்திற்கும் சாம் சிஎஸ் தான் இசையமைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல; அதற்குள் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற கார்த்தியின் ‘சர்தார் 2’
பிசியாகும் சாம் சி.எஸ்
சமீப காலமாக எந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் விலகினாலும் சாம் சிஎஸ்-க்கு அந்த வாய்ப்பு சென்றுவிடுகிறது. அண்மையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பான் இந்தியா ஹிட் அடித்த புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், பின்னணி இசை அமைக்கும் பணியின் போது தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து சாம் சிஎஸ் தான் புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்.
சாம் சி.எஸ்-க்கு அடித்த ஜாக்பாட்
அதே பாணியில் தற்போது சர்தார் 2 படத்தில் யுவனுக்கு பதில் சாம் சி.எஸ் கமிட்டாகி இருக்கிறார். தமிழில் விக்ரம் வேதா, கைதி என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள சாம் சி.எஸ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அண்மையில் தனக்கு பெரிய பட வாய்ப்புகள் வருவதில்லை என சாம் சிஎஸ் ஃபீல் பண்ணி பேசியிருந்த நிலையில், சர்தார் 2 பட வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம் சாம் சி.எஸ்.
இதையும் படியுங்கள்... Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!