பாக்ஸ் ஆபிஸில் சிக்சர் அடித்த சியான்; வீர தீர சூரனின் 3 நாள் வசூல் இத்தனை கோடியா?
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Veera Dheera Sooran Day 3 Box Office Collection : சியான் விக்ரம் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்துள்ள வீர தீர சூரன் படத்தை எஸ்.யு.அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ், பிருத்வி ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மார்ச் 27ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
பிரச்சனைக்கு பின் ரிலீஸ் ஆன வீர தீர சூரன்
வீர தீர சூரன் திரைப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படம் முதல் நாளில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக காலை மற்றும் மதிய காட்சிகள் திரையிடப்படவில்லை. இதையடுத்து மாலைக்குள் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டதால் முதல் காட்சி மாலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் காட்சியிலேயே படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்ததால், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பிக் அப் ஆக ஆரம்பித்தது. முதல் நாள் இரண்டு ஷோவிலேயே ரூ.3 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இதையும் படியுங்கள்... ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ
வீர தீர சூரன் வசூல்
இதையடுத்து இரண்டாம் நாளில் இப்படத்திற்கு ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது 3ம் நாளில் அதைவிட கூடுதலாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது வீர தீர சூரன். அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ.25 கோடி வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தின் வசூல் ரூ.10 கோடிக்கு மேல் தாண்டி உள்ளது. விக்ரம் கெரியரில் அதிக வசூல் அள்ளும் படமாக இது மாறவும் வாய்ப்புள்ளது.
கம்பேக் கொடுத்த விக்ரம்
நடிகர் விக்ரம் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றியை ருசிக்காத நிலையில், அவரின் கம்பேக் படமாக வீர தீர சூரன் திரைப்படம் மாறி உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் விரைவில் உருவாக உள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூன்றாம் பாகமும் உருவாகும் எனவும் விக்ரம் அறிவித்துள்ளார். இன்று விடுமுறை தினம் என்பதால் வீர தீர சூரன் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்? வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம் இதோ