பிரகாஷ் ராஜ் மனைவியை அலேக்காக தூக்கி ஆட்டம் போட்ட சல்மான் கான் - வைரலாகும் வீடியோ

Published : Sep 12, 2025, 04:08 PM IST

Salman Khan Dance Video : நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி போனி வர்மா உடன் சல்மான் கான் நடனமாடிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

PREV
14
Salman Khan Dance With Pony Verma

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 19வது சீசனில் நடிகை குனிகா சதானந்தும் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகளில் வரும் சல்மான் கான், குனிகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், ​​இளம் வயதில் சல்மான் கான் விருது விழாவில் ஆடிய நடன வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில் சல்மான் கான் உடன் ஆடுவது குனிகா என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வந்தனர். அந்த வீடியோவில் சல்மான் கான் உடன் நெருக்கமாக ஆடும் பெண் குனிகா என நினைத்து நெட்டிசன்கள் வைரலாக்க, ஆனால் அதில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது.

24
குனிகா அல்ல, போனி வர்மா

உண்மையில் அந்தப் பெண் குனிகாவே இல்லையாம். அதில் சல்மான் கான் உடன் ஆடுவது நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா (Pony Verma) என்பது தெரியவந்துள்ளது. கருப்பு நிற உடையில், ஹை ஹீல்ஸ் அணிந்து நடனமாடும் போனி வர்மாவை சல்மான் கான் தோளில் தூக்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. குனிகா என்று நினைத்து சிலர் வைரலாக்கிய அந்த வீடியோ, தற்போது வேறு விதமாக வைரலாகிறது.

34
பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி

போனி பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி. முதல் மனைவி லலிதா. அவர் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நடிகை டிஸ்கோ சாந்தி தனது வீட்டில் தங்குமிடம் கொடுப்பாராம். அப்போது நடிகர் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்புக்காக கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சென்று டிஸ்கோ சாந்தி வீட்டில் தங்கியிருந்தாராம். அப்போதுதான் டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியைச் சந்தித்தார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் பிரகாஷ் 2010 இல் போனி வர்மாவை மணந்தார்.

44
யார் இந்த போனி வர்மா?

போனி வர்மாவின் இயற்பெயர் ரஷ்மி வர்மா, 2000 ஆம் ஆண்டில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சக் தூம் தூம் என்ற நடன ரியாலிட்டி ஷோவையும் நடத்தினார், ஆகஸ்ட் 2010 இல் நடிகர் பிரகாஷ் ராஜை மணந்தார். போனி பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories