Actress Who Won Most Awards : சினிமாவில் அறிமுகமான 10 ஆண்டுகளில் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்த தமிழ் நடிகை ஒருவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றால் அது விருதுகள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா, திரிஷா ஆகியோரைக் காட்டிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான நடிகை ஒருவர் அதிக விருதுகளை வென்று குவித்திருக்கிறார். அவர் வெறும் 15 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் வாங்கிய விருதுகள் அதைவிட டபுள் மடங்காகும். அதுவும் குறைந்த வயதில் இத்தகைய வியத்தகு சாதனையை படைத்த அந்த இளம் நடிகை யார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
திரிஷா, நயன்தாராவை முந்திய சாய் பல்லவி
அந்த நடிகை வேறுயாருமில்லை... சாய் பல்லவி தான். இவர் தான் சினிமாவில் அறிமுகமான முதல் 10 ஆண்டுகளில் அதிக விருதுகளை வென்று குவித்த நடிகையாக திகழ்கிறார். இதுவரை 15 படங்களில் மட்டுமே நடித்துள்ள சாய் பல்லவி, விருதுகளுக்காக 47 முறை நாமினேட் ஆகி அதில் 28 விருதுகளை வென்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்ததற்காக இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவரோடு ஒப்பிடுகையில் நயன்தாரா சினிமாவில் அறிமுகமாகி முதல் 10 ஆண்டுகளில் வெறும் 15 விருதுகளை தான் வென்றிருந்தார். அதேபோல் நடிகை திரிஷா முதல் 10 ஆண்டுகளில் 19 விருதுகளை வென்றிருக்கிறார்.
34
சாய் பல்லவி வென்ற விருதுகள்
நடிகை சாய் பல்லவி ஆறு முறை பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறது. பிரேமம், ஃபிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கா ராய், விராட பருவம், கார்கி ஆகிய படங்களுக்காக அவருக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர சைமா விருதுகளையும் மூன்று முறை வென்றுள்ளார் சாய் பல்லவி. அதன்படி பிரேமம், லவ் ஸ்டோரி, அமரன் ஆகிய படங்களுக்காக சைமா விருதை வென்றிருக்கிறார் சாய் பல்லவி. இதுதவிர இரண்டு முறை ஆனந்த விகடன் சினிமா விருதுகள், இரண்டு முறை ஏசியாநெட் விருதுகள், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் என சாய் பல்லவி வென்ற விருதுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
நடிகை சாய் பல்லவிக்கு இதுவரை எட்டாக்கனியாக இருப்பது தேசிய விருது மட்டும் தான், அது தவிர அனைத்து முன்னணி விருதுகளையும் அவர் வென்றுவிட்டார். கார்கி படத்திற்கே அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜஸ்ட் மிஸ்ஸில் நழுவவிட்டார். அநேகமான அமரன் படத்திற்காக சாய் பல்லவி தேசிய விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விருதுகளை வென்று குவிக்கும் அளவுக்கு தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் சாய் பல்லவி தான் ஒரிஜினல் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களே அவரை கொண்டாடி வருகிறார்கள்.