பெரிய விளம்பரமோ ஆரவாரமோ இல்லாமல் வெளியாகும் சில படங்கள், திரையரங்கில் பார்த்து ரசித்தவர்களால் பாராட்டப்பட்டு வெற்றியடையும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும். அதுவும் தற்போது சோசியல் மீடியா கோலோச்சி உள்ள இந்த காலத்தில், ஒரு படம் நன்றாக இருந்தால் அதைப்பற்றிய பாசிடிவ் விமர்சனங்கள் விரைவாகப் பரவுகின்றன. அதேநேரத்தில் படம் சுமாராக இருந்தாலும் அதை போட்டு தாக்கிவிடுகிறார்கள். அந்த வகையில் பெரியளவில் விளம்பரமின்றி வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்டிருக்கும் ஒரு காதல் படத்தைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
24
புது வரலாறு படைத்த சயாரா
அந்த படத்தின் பெயர் சயாரா. புதுமுகங்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா நடிப்பில் மோஹித் சூரி இயக்கிய காதல் படம் தான் சயாரா, இப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஒவ்வொரு மைல்கல்லைக் கடக்கும்போதும் தயாரிப்பாளர்கள் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்தனர். தற்போது படம் எட்டியுள்ள புதிய சாதனையையும் அறிவித்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் ஈட்டிய முதல் காதல் படம் என்கிற புதிய உச்சத்தை சயாரா திரைப்படம் தொட்டுள்ளது. அப்படத்தை தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
34
பட்ஜெட் 45 கோடி வசூல் 404 கோடி
அதன்படி இப்படத்தின் உலகளாவிய வசூல் 404 கோடி என அறிவித்துள்ளனர். அதுவும் ரிலீஸ் ஆகி 12 நாட்களில் அப்படம் இந்த இமாலய வசூலை ஈட்டி உள்ளது. இதில் இந்தியாவில் 318 கோடியும், வெளிநாடுகளில் 86 கோடியும் வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் படத்திற்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், பாக்ஸ் ஆபிஸில் இன்னும் பல சாதனைகளை சயாரா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெறும் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தற்போதே படத்தின் பட்ஜெட்டைவிட 797 சதவீதம் அதிகம் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது சயாரா. இதனால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களில், சையாராவை விட அதிக வசூல் செய்தது சாவா மட்டுமே. அப்படம் இந்தியாவில் மட்டும் 693 கோடி வசூலித்தது. அப்படத்தின் வசூல் சாதனையையும் சயாரா முறியடிக்க வாய்ப்பு உள்ளது. சயாரா திரைப்படத்திற்கு சங்கல்ப் சதானா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ரோஹன் ஷங்கர் வசனம் எழுதியுள்ளார். விகாஸ் சிவராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஹித் மக்வானா, தேவேந்திர முர்தேஷ்வர் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். கீதா அக்ரவால் சர்மா, ராஜேஷ் குமார், வருண் படோலா, ஷாத் ரந்தாவா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.