Madharaasi First Single Salambala Promo Video Released : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Madharaasi First Single Salambala Promo Video Released : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்று உச்சம் தொட்டு நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த அமரன் படம் தான் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படம் தான் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து கொடுத்து சாதனை படமாக அமைந்தது. அதுவரையில் காமெடி ஹீரோவாக திகழ்ந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
25
மதராஸி ரிலீஸ் தேதி
மேலும், கோலிவுட்டின் அடுத்த தளபதி என்றெல்லாம் அப்போது பேச்சு அடிபட்டது. இதற்கு முக்கிய காரணம் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது தான். இதை வைத்து பல விதமான பேச்சு கோட் படம் வெளியான போது அடிபட்டது.
35
மதராஸி முதல் சிங்கிள் டிராக்
அமரன் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலுக்கான புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
45
மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சலம்பல புரோமோ வீடியோ
அந்த வீடியோவில் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். என்னதான் லவ் ஃபெயிலியராக இருந்தாலும் அதனை கடந்து செல்ல வேண்டும் என்பதை சலம்பல பாடல் தெளிவாக எடுத்து சொல்லும் விதமான பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. சலம்பல பாடல் எப்படி உருவானது என்பதை இந்த புரோமோ வீடியோவில் தெளிவாக படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
55
சலம்பல புரோமோ வீடியோ
சிவகார்த்தியேன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சலம்பல பாடல் புரோமோ வீடியொவில் ஏ ஆர் முருகதாஸ் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அனிருத் அலுவலகத்திற்கு வருகிறார். இருவரும் அனிருத்தை சந்தித்து பாடல் பற்றி பேச ஆரம்பிக்க, பாடலாசிரியர் என்று பேச உடனே சிவகார்த்திகேயன் தன்னைப் பற்றி பேசுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்க உடனே சூப்பர் சுப்பு என்று சொல்ல சிவகார்த்திகேயனும் உடனே சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்கிறார்.
அதன் பிறகு பாடலுக்கான காட்சியை சொல்லவே பாடலாசிரியர் சூப்பர் சுப்புவும் பொலம்பல சலம்பல என்று ஆரம்பிக்க அதையே சாங்காக ஓகே சொல்லி சாங்கையும் பிளே பண்ணி பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தான் வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை சாய் அபயங்கர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.