மாதம்பட்டி ரங்கராஜூக்கும் 2ஆவது மனைவி கிரிஸ்டாவுக்கும் இடையில் இவ்வளவு வயசு வித்தியாசமா?

Published : Jul 29, 2025, 08:58 PM IST

Age Difference Between Madhampatty Rangaraj and Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது 2ஆவது மனைவியான ஜாய் கிரிஸ்டாவுக்கும் இடையில் எவ்வளவு வயது வித்தியாசம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி

Age Difference Between Madhampatty Rangaraj and Joy Crizildaa : சினிமாவாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி 2ஆவது திருமணம் என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலேயும் வசதி படைத்தவர்கள் என்றால் கூடுதல். அதாவது திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த சூழலில் தான் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலமாக மிகப்பெரிய கோடீஸ்வரராக வளர்ச்சி அடைந்த பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

26
மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம், ஜாய் கிரிசில்டா

அதுமட்டுமின்றி இந்த அவசர திருமணத்திற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது அவர் திருமணம் செய்து கொண்ட ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

36
மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம்

இன்றைய காலகட்டத்தில் லிவிங் டூகெதரில் வாழ்ந்து கர்ப்பமாக இருக்கும் சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெற்றிருக்கிறார். ஆம், ஏற்கனவே முதல் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் இப்போது அவசர அவசரமாக 2ஆவது திருமணமும் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையில் கிசு கிசு பரவி வந்துள்ளது.

46
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா

மேலும், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் என்று சோஷியல் மீடியா பகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பேசி வந்துள்ளார். அப்போதும் அவர் மாசமாக இருந்துள்ளார். ஜாய் கிரிசல்டா தனது எக்ஸ் பக்கங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி கூறியிருந்தவை, மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே என்று குறிப்பிட்டு ஹார்டினையும் பதிவிட்டிருக்கிறார். இதே போன்று, உன் கழுத்தில் மாலையிட… உன்னிரண்டு தோளைத் தொட… என்ன தவம் செஞ்சேனோ என் மாமா… என்று பதிவிட்டிருந்த நிலையில் இன்று புதிதாக திருமண புகைப்படங்களை மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகிறார்.

56
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா

ஜாய் கிரிசில்டாவும் சாதாரணமானவர் கிடையாது. சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவ்வளவு ஏன் தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். அதோடு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, புரூஸ் லீ, கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த நிலையில் கூடிய விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தலாம் என்று தெரிகிறது.

66
ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் வயது வித்தியாசம்

ஜாய் கிரிசில்டாவிற்கும் இது 2ஆவது திருமணமாம். இதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள் பட இயக்குநரான ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் நிலையில் 2023 ஆம் ஆண்டு திருமண உறவை முறித்துக் கொண்டனர். இந்த நிலையில் தான் இவர்களது வயது வித்தியாசம் எவ்வளவு என்பது பற்றி பலரும் அறிந்து வரும் நிலையில் அதைப் பற்றி பார்க்கலாம். மாதம்பட்டி ரங்கராஜிற்கு தற்போது 47 வயதாகும் நிலையில் அவர் 2ஆவதாக திருமணம் செய்து கொண்ட ஜாய் கிரிஸில்டாவிற்கு 37 வயதாகிறதாம். அதன்படி இருவருக்கும் இடையில் 5 வயது வித்தியாசம் என்று கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories