சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் சதி; வலையில் சிக்கிய ரேவதியை காப்பாற்றிய கார்த்திக் ராஜா

Published : Jul 29, 2025, 04:08 PM IST

Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு விரித்த வலையில் ரேவதி சிக்கிய நிலையில் அவரது உயிரை கார்த்திக் ராஜா காப்பாற்றியுள்ளார்.

PREV
17
ரேவதி மற்றும் கார்த்திக் - கார்த்திகை தீபம் 2

Karthigai Deepam 2 Serial : நாளுக்கு நாள் சீரியலுக்கான மோகம் அதிகரித்து வரும் நிலையில் சீரியல்களிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று சீரியல்களுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் கார்த்திக் ராஜா, ரேவதி, சாமுண்டீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் தான்.

27
ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்

இந்த தொடரில் வில்லி என்றால் அது சாமுண்டீஸ்வரியின் சகோதரி சந்திரகலா தான். மேலும், சிவனாண்டியும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். எப்படியாவது தனது அக்காவையும், அக்காவின் குடும்பத்தையும் பழி தீர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

37
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு

இதற்காக ஒவ்வொரு முறையும் திட்டமிடும் போதும் ஏதாவது ஒரு வழியில் வந்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் தான் கார்த்திக் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தெரியவர ரேவதி அதிர்ச்சி அடைந்து அவரது பாட்டி உள்பட அனைவரிடமும் என்ன நடந்தது என்பது பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.

47
கார்த்திகை தீபம் 2

அதன் பிறகு இதைப் பற்றி இன்னும் கார்த்திக்கிடம் ரேவதி எதுவும் பேசவில்லை. கார்த்திக்கின் திருமணத்தை வைத்து எப்படியாவது குடும்பத்தில் கலகம் உண்டாக்க நினைத்து கடைசியில் ஏமாந்து போயிவிட்டார். இதன் காரணமாக சாமூண்டீஸ்வரியின் புதிய பேக்டரியில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அதில், சாமூண்டீஸ்வரியின் மேனேஜர் ஒருவர் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

57
ரேவதி மற்றும் கார்த்திக்

இந்த நிலையில் தான் பேக்டரி திறப்பு விழாவிற்கு வீட்டிலிருந்து புறப்பட்ட சாமுண்டீஸ்வரிக்கு 2 முறை தடங்கல் ஏற்பட்டது. ஒரு முறை வீட்டில் கீழே விழ தெரிந்தார். 2ஆவது முறை கார் ரிப்பேர் ஆனது. அதோடு நேற்றைய எபிசோடு முடிந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம். அதில், தொழிலாளர் ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டதாக தகவல் வர கார்த்தியும் மயில்வாகனமும் கிளம்பி செல்கின்றனர்.

67
சாமுண்டீஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்ட சந்திரகலா

அதற்குள் சந்திரகலா இங்கே சாமுண்டீஸ்வரி கொல்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அடுத்து கார்த்திக்கு அந்த தொழிலாளி யாரோ வேண்டுமென்றே கரண்ட் ஷாக் அடிப்பது போல் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறான். உடனே கார்த்திக் ரேவதி, சாமுண்டீஸ்வரி, துர்கா, ரோஹினி என அனைவருக்கும் போன் போட்டு உஷாராக இருக்க சொல்லி எச்சரிக்க முயற்சி செய்ய போன் ரீச் ஆகாமல் போய் விடுகிறது.

77
கார்த்திகை தீபம் 2

பிறகு இங்கே ரேவதி ஸ்விட்ச் போட போகும் சமயத்தில் கார்த்திக் அங்கு வந்து தடுத்து நிறுத்துகிறான். இதன் மூலம் ரேவதியின் உயிரை காப்பாற்றுகிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது? கொலை முயற்சிக்கான பின்னணி குறித்து கார்த்திக் தெரிந்து கொண்டாரா இல்லையா என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோட்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories