சினிமாவுக்காக டாக்டர் வேலையை தூக்கியெறிந்த டாப் 5 கோலிவுட் ஹீரோயின்கள்..!

Published : Sep 13, 2025, 03:39 PM IST

Doctors Turned as Heroines : எம்பிபிஎஸ் படித்து பட்டம் பெற்ற பின்னர் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி ஜொலித்து வரும் டாப் 5 தமிழ் நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

PREV
16
Kollywood actresses who are doctors

சினிமா என்பது ஒரு ஆச்சர்யம் நிறைந்த துறை என்பது அனைவரும் அறிந்ததே. அதில் தங்களுடைய நடிப்பாலும், அழகாலும் ஈர்த்த நடிகைகள் பலர். கல்வித் துறையிலும் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எம்பிபிஎஸ் படித்து மருத்துவர் பட்டம் பெற்ற நாயகிகளும் உண்டு. மருத்துவர்களாக வேலை பார்க்க வாய்ப்பு இருந்தும், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் மின்னும் சில திறமையான நாயகிகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
ஸ்ரீலீலா

பராசக்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை ஸ்ரீலீலாவும் ஒரு எம்பிபிஎஸ் பட்டதாரி தான், தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மிகக் குறுகிய காலத்திலேயே மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரது தாயார் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால், ஸ்ரீலீலாவுக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது தாயின் ஊக்கத்தால் அவர் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். 2021 இல் பட்டம் பெற்ற ஸ்ரீலீலா, அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தினார். மருத்துவப் பின்னணியில் இருந்து வந்த அவர், மற்ற நடிகைகளை விட தனித்துவமாகத் தெரிகிறார்.

36
சாய் பல்லவி

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக ஜொலிக்கும் சாய் பல்லவி. இயல்பான நடிப்புக்குப் பெயர் பெற்ற இவர், மற்ற நாயகிகளை விட மிகவும் தனித்துவமானவர். அவர் நடிகையாக வருவதற்கு முன்பு ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் நடிப்புத் துறையில் தீவிரமாக இருந்தபோதே மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மருத்துவமனை அமைத்து, ஏழைகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க சாய் பல்லவி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

46
அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தமிழ்த் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நடிப்புடன், சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும் பெற்றுள்ளார். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். தந்தையைப் போலவே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் அதிதி, தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை தமிழில் இவர் நடித்த விருமன், மாவீரன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

56
ஷிவானி

டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த மற்றொரு நடிகை ஷிவானி ராஜசேகர். இவர் தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஆவார். ஷிவானியின் தாயார் ஜீவிதாவும் சினிமாவில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஷிவானி ராஜசேகர், தமிழில் ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்தார் ஷிவானி. இவர் தமிழ் மட்டுமின்றி

தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

66
ஐஸ்வர்யா லெட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவுக்குள் வந்தவர் தான். இவர் சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லெட்சுமி, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தார். இவர் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவக் கல்லூரியில் படித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories