அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட்

Published : Sep 13, 2025, 02:05 PM IST

Top 5 Serials : சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Top 5 Tamil Serials

சின்னத்திரையில் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான். இந்த சேனல்கள் தான் டிஆர்பி ரேஸிலும் முன்னிலையில் உள்ளன. இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளன. இதனால் கடந்த வாரம் சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகிய சேனல்களில் அதிகளவில் பார்க்கப்பட்ட டாப் 5 சின்னத்திரை சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

24
டாப் 5 சன் டிவி தொடர்கள்

சன் டிவியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியலில் மருமகள் சீரியல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 7.93 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் கயல் சீரியல் உள்ளது. இந்த சீரியல் 8.19 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாம் இடத்தில் 8.27 டிஆர்பி ரேட்டிங் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. இரண்டாம் இடத்தை ஸ்வாதி கொண்டே நடித்த மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 9.16 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.29 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

34
டாப் 5 விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவியில் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்களின் பட்டியலில் 5-ம் இடத்தை மகாநதி சீரியல் பிடித்துள்ளது. பிரவீன் பென்னட் இயக்கியுள்ள இந்த சீரியலுக்கு 5.19 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் 6.14 ரேட்டிங் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது, மூன்றாம் இடத்தை பிடித்துள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 6.97 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அய்யனார் துணை சீரியல் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு 7.75 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. முதலிடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 8.53 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

44
டாப் 5 ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சீரியல்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. அதில் சந்தியா ராகம் சீரியல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அந்த சீரியலுக்கு 4.15 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் வீரா சீரியல் உள்ளது. அந்த சீரியல் 4.53 புள்ளிகளை பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் 4.76 ரேட்டிங் உடன் அண்ணா சீரியல் உள்ளது. புதிதாக ஜீ தமிழில் தொடங்கப்பட்ட அயலி சீரியல் 5.01 டிஆர்பி ரேட்டிங் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை கார்த்திகை தீபம் 2 சீரியல் பிடித்திருக்கின்றது. அந்த சீரியலுக்கு 5.57 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories