முத்துவுக்கு வில்லியாக மாறிய விஜயா; மகனையே போலீஸில் மாட்டிவிட்டது ஏன்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 13, 2025, 12:36 PM IST

Siragadikka Aasai Serial Today 797th Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை சிறு வயதில் விஜயா பாட்டி வீட்டில் விட்ட நிலையில், அவரை போலீசார் ஏன் கைது செய்தனர் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியல் செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்களாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிளாஷ்பேக் ஸ்டோரியை தான் தற்போது கொண்டுவந்திருக்கிறார்கள். சிறுவயதில் முத்து மீது விஜயா மிகவும் பாசமாக இருக்கிறார். அப்போது ஒரு முறை ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் செல்லும் விஜயாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் விஜயாவிடம், நீங்கள் உங்களது இரண்டாவது மகனை 6 வருடம் பிரிந்திருக்க வேண்டும் அது தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. அப்படி இல்லையென்றால் உங்கள் உயிருக்கே ஆபத்து இருப்பதாக சொல்கிறார்.

24
முத்துவை பிரியும் விஜயா

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு பயந்துபோன விஜயா, முத்துவை அவருடைய பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார். அவனை பிரிந்திருக்க மனசு கேட்காத விஜயா, அடிக்கடி சென்று முத்துவை பார்த்து பாச மழை பொழிந்து வருகிறார். பின்னர் ஜோசியரை சந்தித்து முத்துவை பாட்டி வீட்டில் விட்டுவிட்டதாக சொல்லும் விஜயா, அவனை அவ்வப்போது சென்று பார்க்கலாமா என கேட்கிறார். அதற்கு அவர் நீங்க அவனை பார்த்தால் ஆபத்து உங்களுக்கு தான் என பயமுறுத்தியதால் முத்துவை பார்ப்பதை தவிர்த்து வருகிறார் விஜயா. மறுபுறம் மனோஜ் மீது விஜயாவுக்கு பாசம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

34
ஜெயிலுக்கு செல்லும் முத்து

ஆறு ஆண்டுகள் கழித்து முத்து தன்னுடைய அம்மாவிடமே வந்துவிடுகிறார். ஆனால் திடீரென ஒருநாள் தன்னுடைய பாட்டிக்கு போன் பண்ணி தனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்லை என்றும் தன்னை இங்கு இருந்து அழைத்து சென்றுவிடுமாறும் கூறி அழுகிறார். பாட்டியும் முத்துவை அழைத்து செல்ல வருகிறார். அந்த சமயத்தில் சீர்திருத்த பள்ளியில் இருந்து வரும் போலீசார் முத்துவை கைது செய்ய வந்திருப்பதாக கூறுகிறார்கள். இதைப்பார்த்து வீட்டில் இருந்த அனைவருமே பதறிப்போகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் அவன் போகட்டும் அவனுக்கு இது தேவை தான் என முத்து மீது கடும் கோபத்தில் இருக்கிறார். விஜயாவுக்கு இவ்வளவு வெறுப்பு வரும் அளவுக்கு முத்து என்ன தவறு செய்தார் என்பது தெரியவில்லை.

44
மகனுக்கே வில்லியான விஜயா

ஆனால் அண்ணாமலை இதற்கு முன்னர் வீட்டில் சண்டை வரும்போதெல்லாம், உன்னாலையும் மனோஜ்னாலையும் தான் முத்துவோட பாதி வாழ்க்கை வீணா போச்சு. அவன் வாழ்க்கையை கெடுத்துறாதீங்க என்று சொல்வார். மனோஜ் மேல் உள்ள தவறை மறைப்பதற்கு தான் முத்துவை விஜயா ஜெயிலுக்கு அனுப்பி இருப்பது போல் தெரிகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை முத்து மீது பாசமாக இருக்கும் விஜயா, 6 ஆண்டுகள் கழித்து முத்து வந்த பின் அவன் மீது வெறுப்பாக இருப்பதால், அவரால் தான் முத்து ஜெயிலுக்கு சென்றிருக்க கூடும் என்பதை யூகிக்க முடிகிறது. அடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories